About

About

Mission

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். தமிழீழ மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தம்மை ஈகம் செய்த மாவீரர்கள் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது இதன் குறிக்கோள் ஆகும்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத் தமிழ் மக்களுடன் இணைந்து மாவீரர் வீர வணக்க நிகழ்வுகளை நடாத்துதல், மாவீரர்கள் தொடர்பான ஆவணங்களைப் பேணுதல். மாவீரர் குடும்பங்களுக்கான மதிப்பளிப்பை வழங்குதல் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் பதிவுகளை ஆவணப் படுத்துதல், கனடிய மண்ணில் நடைபெறும் மாவீரர் தொடர்பான செயற்பாடுகளைப் பதிவு செய்தல் போன்ற விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.

மாவீரர் நாளான கார்த்திகை 27ஐ ஒன்றிணைந்த மக்களின் ஒருமித்த உணர்வு பூர்வமான வருகையுடன் ஒரே இடத்தில் நான்கு நிகழ்வுகளாக நடாத்தி வருகின்றது. மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தில் மாவீரர் சார்ந்த வணக்க நிகழ்வுகள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம்.
கனடா